Tuesday, March 31, 2009

மகாகவி மன்னிக்க!!!!

21.3.2009 12:30AM

அவள்: ஹாய் மாம்ஸ்!!! இன்னைக்கும் லேட்டா ? சரி… நாளைக்கு எத்தன மணிக்கு?

அவன்: ??!! எது எத்தன மணிக்கு?

அவள்: அதுக்குள்ள மறந்துடீங்களா? கொஞ்சமாச்சும் பொறுப்பிருக்கா உங்களுக்கு? ஆபீஸ் வேலைகளுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்த வீட்ல ஒரு விஷயம்னா கொடுக்றீங்களா?

அவன்: என்ன டா பண்றது? வேல போட்டு புழியறாங்க! இன்னைக்கு வேற ஒருத்தன் எழுதுன java codeல ஒரு error! அத நான் trace பண்ண…..

அவள்: சும்மா வளவளனு பேசாதீங்க! இப்டியே பேசிக்கிட்டு இருந்தா தூங்க நேரம் ஆகிடும்! அப்புறம் நாளைக்கு காலைல எழுந்துக்க late ஆகி, கிளம்பவும் late ஆகிடும்! அத்தைகிட்ட டோஸ் தான் கெடைக்கும்! சீக்கிரமா 7 மணிக்கு alarm வச்சிட்டு தூங்குங்க!

அவன்: 7 மணிக்கா? 8 மணிக்கு taxi வர சொல்லிருக்கேன் di!

அவள்: ஓ 8 மணிக்கு தான் வருமா? அப்டினா ஒரு 7:30 க்கு என்ன எழுப்புங்க! குளிச்சிட்டு கெளம்ப சரியா இருக்கும்!

அவன்: (மனதுக்குள்) அப்ப என் breakfast??

21.3.2009 7:15AM

அவனுடைய அம்மா: என்ன ரெண்டு பெரும் சும்மா உக்காந்துகிட்டு இருக்கீங்க? போய் குளிச்சிட்டு கெளம்புங்க! நேரம் ஆகிட்டே போகுதுல..

அந்த வீட்டின் தொலைக்காட்சிக்கு கூட அவர்களின் அவசரம் புரிந்தது போல அந்த காலை வேளையில் remix பாடல்களை வேகமாய் இசைத்து கொண்டிருந்தது! அவன்-டிக்-அவள்-டிக்-அம்மா-டிக் என கடிகாரத்தை மைய படுத்தியே அவர்களின் காலை நேரமும் கால் சக்கரமும் சுழன்றுகொண்டிருந்தது!

அவள் : <பல்லை கடித்து கொண்டு> என்னங்க! மணிய பாருங்க 7:50 ஆகிடுச்சு! எங்கயாச்சும் time mgmt பத்தி தெரிஞ்சிருக்கா உங்களுக்கு! இத பத்தி meenaks ஒரு post போட்டிருந்தார் பாருங்க.. அதுல….

அவன்: சரி சரி குளிக்க போய்டேன்!

<காக்கை குளியல் முடித்து திரும்பியதும்> (no pun intended :P)

அவன்: என்ன இது இன்னும் வண்டிய காணோமே! <பேசியில் சிறிது நேரம் சத்தமாக பேசிவிட்டு காரமாக திரும்பி> அறிவு கெட்ட பசங்க! 8 மணிக்கு வர சொன்னா, வீடு தெரியல sir 10 நிமிஷம்னு சொல்றாங்க!

அம்மா: நம்ம அவசரத்த புரிஞ்சுக்க மாட்டாங்களே!

21.3.2009 8:20AM

Driver: சாரி சார்!! அட்ரஸ் கண்டுபுடிக்கறதுக்குள்ள கொஞ்சம் கஷ்டமா போச்சு! Royapettah தான?

அவன்: பரவால்லங்க! கொஞ்சம் சீக்ரமா கொண்டும் போய் சேத்துடீங்கனா போதும்!

அம்மா: ச்சே .. இன்னும் கொஞ்சம் முன்னாடி கெளம்பிருக்கலாம்! சனிக்கெழம கூட ஆபீஸ்லாம் இருக்குமா மா? வெளில முக்கியமா போனும்னா கூட முடியாது போலருக்கே!!

அவள்: ஆமா அம்மா! Leave நாளுல அவசரமா போகனும்னா கூட முடிய மாட்டுது! Time ஆகிட்டே போகுதே!

அவன்: Alwarpet போய் சுத்தி போனா நேரமாகிடும்! அப்டியே Gemini flyoverஅ புடிங்க!
Driver: சரிங்க சார்!! Royapettahல எங்க?



அவன்: சத்யம் தியேட்டர் (என்று கூறி டிரைவர் பக்கம் திரும்பி ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தான்)!!
ஹிஹி!!! இது முழுக்க முழுக்க ஒரு கற்பனை சம்பவமே!! :P

2 comments:

Pavithra Vijay said...

I dont think this is an imaginary post...Guru bhai, pls reconfirm :-)

சரவண வடிவேல்.வே said...

நல்ல கற்பனை.. ஆனால் முழுவதும் கற்பனையாக இருக்க முடியாது.