Tuesday, January 20, 2009

32வது சென்னை புத்தக திருவிழா - 2009

வருடம் ஒருமுறை வரும் பண்டிகைகள் தான் பொங்கலும் தீபாவளியும் ஊர் திருவிழாக்களும்.. ஆயினும் ஒவ்வொருமுறையும் ஆரவாரமாக அதற்காக தயாராகிறோம் இல்லையா? வருடம் ஒரு முறை பார்த்தவற்கே அப்படி எனில் முதன்முறையாக அப்படி ஒரு அனுபவத்திற்கு தயார் ஆகுபவரின் மன நிலை எப்படி இருக்கும் என யூகிக்க முடிகிறதா?ஆம்! அப்படி தான் நான் புத்தக கண்காட்சிக்கு காத்திருந்ததும்!

யோசித்து பார்க்கையில் திருவிழாவிற்கு காத்திருந்த சிறுமி என்ற உவமை மிகவும் தவறு என்றே தோன்றுகிறது!இது அதற்கும் மேலே! மிக சரியாக சொல்வதானால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே விடுமுறைக்கு வரும் என் தந்தைக்காக காத்திருந்த மனநிலையில் தான் இருந்தேன்!! மகிழ்வுடன் எதிர்பார்ப்புகளை தேக்கி வைத்து!

தேதிகள் அறிவிக்கபடுவதற்கு முன்பே என் விருப்ப பட்டியல் தயாராகிவிட்டது! ஆங்கில புத்தகங்கள் எனக்கு நகலே போதுமானது என்பதாலும் அவற்றை moore மார்க்கெட்டில் வாங்கி கொள்ளலாம் என்பதாலும் இம்முறை தமிழ் புத்தகங்களை மட்டுமே அள்ளி வருவது என முடிவு செய்திருந்தேன்! பட்டியலை இறுதி செய்வதற்கு முன் அம்மாவிற்கும் அக்காவுக்கும் தொடர்பு கொண்டு தேர்வுகளை உறுதி செய்துகொண்டேன் ஏனெனில் பலமுறை நானும் அக்காவும் ஒரே புத்தகத்தை வாங்கியது உண்டு! அம்மாவின் விருப்பங்களுடன் பட்டியல் மெருகேறியது!

இனி தாக்குதல் தான் :)

இரு முறை கண்காட்சிக்கு செல்வது என வைத்திருந்தேன்! முதல் முறை வாங்குவதற்கு; அடுத்த முறை அனுபவத்திற்கு (இரண்டாம் முறை புத்தியை ஓரம்கட்டி மனது வென்றது 5 புத்தகங்களை ;))

கண்காட்சி - சில குறிப்புகள்:

1. பொன்னியின் செல்வன் படிப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது.. பல பிரிவுகளில் கல்கியின் புத்தகங்கள் சடுதியில் விற்று தீர்ந்தன!
2. சுய முன்னேற்ற புத்தகங்களை புரட்டுபவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது!
3. வழக்கம் போலவே கண் - காட்சிக்காக (window shopping??) மட்டுமே வந்தவர்கள் கூட்டமும் அதிகம்
4. அதிக விற்பனை நடந்த பிரிவுகளாக பஜ்ஜி/போண்டா/கடலை கடைகள் அறியப்பட்டிருக்கும்.
5. ஒரே புத்தகத்தை பல முறை எடுத்த பெண்களையும், ‘இதான் நம்மகிட்ட இருக்கே da’ என்ற ஆண்களையும் காண முடிந்தது!
6. எனக்கு திசைகளை கண்டறிவதில் சிக்கல் இருக்கிறது.

குறிப்பு: என்ன புத்தகங்கள் என குறிப்பிடவே இல்லையே? என கேட்பவர்களுக்கு: நான் வாங்கிய புத்தகங்கள் அவற்றை பற்றிய விமர்சனங்கள் வரும் வாரங்களில்!!!!