Showing posts with label kavidhai. Show all posts
Showing posts with label kavidhai. Show all posts

Wednesday, June 24, 2009

இருக்குமிடத்தை விட்டு..



‘சாவது துரத்துது’

உள்ளுணர்வின் ஓசையில் விரைந்து நடந்தேன்

தாவிச் சென்ற குட்டையில் என் முகம்,

மாலையிட்டு சட்டமிட்டு,

வேகத்தை அதிகப்படுத்தி எடுத்தேன் ஓட்டம்

கற்பனைக் குதிரையின் ஆங்கார கனைப்பில்

கேட்டன சிலப்பல ஒப்பாரி வார்த்தைகள்

வியர்வையில் கசகசத்த முதுகின் மேலொரு மெல்லியத் தொடுகை

திரும்பிப் பார்க்காமல் உயிர் பிடித்து ஓடினேன்

வாழ்வை நோக்கி.

நெருப்பின் நாக்கு முகத்தைச் சுட்டது

திடுக்கிட்டு திரும்பினேன்

ஆதரவு தேடி.

பெருமூச்சொன்றுடன் வாழ்க்கைச் சிரித்தது

மெல்லிய சாரலாய்!


Photo courtesy: Google